இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஒன்றிய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கச்சத்தீவையொட்டிய இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்த ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 15 மீனவர்களையும் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது மிகவும் கண்டிக்கதக்கது. மீன்பிடித் தடைக்காலம் முடிந்து தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் சமீபகாலமாக இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவது மிகவும் வருந்தத்தக்கது.

இச்செயல் மீனவர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, இனிமேலும் தாமதிக்காமல் தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒன்றிய அரசு இலங்கை அரசுடன் பேசி நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்பொழுது கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும். மீனவர்கள் நலனில் அக்கறையோடு, ஒன்றிய அரசு வெளியுறவுத் துறையின் மூலம் தொடர் கண்காணிப்பில் ஈடுப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்