ஜார்க்கண்ட் முதல்வர் கைது பாஜவின் அதிகார அத்துமீறல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை கைது செய்துள்ளது பாஜவின் அதிகார அத்துமீறலை காட்டுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு: அராஜகம், வெட்கக்கேடு. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை கைது செய்துள்ளது ஒன்றிய பாஜ அரசின் அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை ஆகும். பழங்குடியினத்தைச் சேர்ந்த தலைவர் மீது இப்படி விசாரணை அமைப்புகளை ஏவியிருப்பது அரசியலில் மற்றுமொரு தரந்தாழ்ந்த வீழ்ச்சி.

பாஜவின் பதற்றத்தையும் அதிகார அத்துமீறலையுமே இது காட்டுகிறது. இத்தகைய அசிங்கமான அரசியலால் எதிர்க்கட்சிகளின் குரலை அடக்கிட முடியாது. பாஜவின் காழ்ப்புணர்ச்சி அரசியலை உறுதியுடன் எதிர்கொண்டு, அவர்களுக்கு அடிபணிய மறுத்துள்ளார் ஹேமந்த் சோரன். சோதனைகளில் துவளாமல், பாஜவின் மிரட்டல் உத்திகளுக்கு எதிராக அவர் காட்டியுள்ள இந்த நெஞ்சுரம் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் ஒன்று. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு