தண்டவாளத்தில் டெட்டனேட்டர்கள் கிடந்ததால் ராணுவ சிறப்பு ரயில் நிறுத்தம்: ரயில்வே ஊழியர் கைது

கந்தவா: காஷ்மீரில் இருந்து கடந்த 18ம் தேதி ராணுவ சிறப்பு ரயில் வந்து கொண்டு இருந்தது. மத்தியப்பிரதேசத்தின் நேபா நகர் மற்றும் கந்த்வா ரயில்நிலையங்களுக்கு இடையே வந்தபோது தண்டவாளத்தில் திடீரென வெடிப்பு சத்தம் கேட்டது. இதனை தொடர்ந்து ரயில் ஓட்டுனர் ரயிலை நிறுத்தினார். கீழே இறங்கி சோதனை செய்ததில் அந்த பகுதியில் ரயில்வேயால் பயன்படுத்தப்படும் பாதிப்பில்லாதது என்று அழைக்கப்படும் 10 டெட்டனேட்டர்கள் கிடந்தது. இவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டவாள ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த டெட்டனேட்டர்கள் வெடிக்கும்போது பலத்த சத்தத்தை எழுப்பும். ரயிலை நிறுத்துவதற்கு வழங்கப்படும் சமிக்ஜைக்காக பயன்படுத்தப்படுவதாகும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு; அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

அருவியில் நண்பர்களுடன் குளித்தபோது திடீர் வெள்ளத்தில் சிக்கி 3 மருத்துவ மாணவர்கள் பலி: 2 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை

அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கு கர்நாடக ஆளுநரை திரும்ப பெற வேண்டும்: ஜனாதிபதியிடம் வலியுறுத்த சித்தராமையா அரசு முடிவு