ராணுவத்தில் அதிகாரி பணியிடங்கள்

காலியிடங்கள்: ஆண்கள்-70 (இவற்றில் 7 இடங்கள் போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.). பெண்கள்- 6. (இவற்றில் ஒரு இடம் போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது).
சம்பளம்: ரூ.56,100- 1,77,500.
வயது: 01.01.2025 தேதியின்படி 19 முதல் 25க்குள்.
தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று, என்சிசி யில் குறைந்தபட்சம் ‘சி’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு என்சிசி பயிற்சி தேவையில்லை.

உடற்தகுதி: (ஆண்கள்)- உயரம்: 157 செ.மீ., உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும். பெண்கள் உயரம்: 152 செ.மீ., குறைந்தது எடை 42 கிலோ இருக்க வேண்டும்.
உடற்திறன் தகுதி: 2.4 கி.மீ., தூரத்தை 15 நிமிடங்களுக்குள் ஓடிக் கடக்க வேண்டும். சிட்அப்புகள் 25, புஷ்அப்புகள்-13, சின்அப்புகள்-6 மற்றும் 3 முதல் 4 மீட்டர் தூரம் கயிறு ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் எஸ்எஸ்சி தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு சென்னையிலுள்ள ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகடமியில் 49 வாரங்கள் பயிற்சி வழங்கப்படும். அக்டோபர் 6ல் பயிற்சி தொடங்கப்படும். ஆறு மாத பயிற்சிக்குப் பின் லெப்டினென்ட் பணி வழங்கப்படும்.www.indianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.08.2024.

Related posts

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை..!!

வில்லிவாக்கம் சத்யா நகரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய 114 வீடுகள் மீது நடவடிக்கை: இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டல அலுவலகத்தில் முற்றுகை

மத்தியப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!!