சேனை வறுவல்

தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு – 250 கிராம்
துருவிய தேங்காய் – 1/2 கப்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
சாம்பார் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – வறுப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் சேனைக்கிழங்கை மெல்லிய 1 இன்ச் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் அதை குக்கரில் போட்டு, 1/4 கப் நீரை ஊற்றி, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது உப்பு தூவி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கேறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் பொன்னிறமாக ரோஸ்ட் செய்ய வேண்டும். இந்த நிலையில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், சாம்பார் தூள் சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குக்கரில் வேக வைத்துள்ள சேனைக்கிழங்கையும் சேர்த்து நன்கு மசாலா கிழங்குடன் ஒன்று சேரும் வரை கிளறி விட வேண்டும். மசாலா கிழங்குடன் நன்கு ஒன்று சேர்ந்து நன்கு ரோஸ்ட்டாகி இருந்தால், அடுப்பை அணைத்துவிட வேண்டும். இப்போது சுவையான கல்யாண வீட்டு சேனை வறுவல் தயார்.

Related posts

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்கள்

காலிஃப்ளவர் சூப்

பூசணி மசால்