மணிப்பூரில் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்த ராகுல் விரும்புகிறாரா?: பாஜ தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி

புதுடெல்லி: மணிப்பூரில் 3 மாதங்களாக நீடிக்கும் வன்முறையை இந்திய ராணுவம் நினைத்தால் 2 நாட்களில் முடிவுக்கு கொண்டு வர முடியும் என வயநாடு எம்பி ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இதுகுறித்து முன்னாள் ஒன்றிய அமைச்சரும், பாஜ தலைவருமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: 1966ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் ஐஸ்வாலில் இந்தியர்கள் மீதே இந்திய விமானப்படை குண்டு மழை பொழிந்தது.

அவரது பாட்டி ஆட்சி காலத்தில் நடந்தது போன்றே இப்போது மணிப்பூரில் இந்தியர்கள் மீதே இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என ராகுல் காந்தி எதிர்பார்க்கிறாரா? மணிப்பூர் மக்களிடையே நல்லிணக்கத்தை பரப்பி இந்தியர்களை ஒன்றிணைக்க வேண்டாமா? ராகுல் காந்திக்கு இந்திய நாட்டை பற்றியும், அதன் அரசியலை பற்றியும் புரியவில்லை. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை அடிக்கடி சீர்குலைத்து பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டன. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

மதுரை ஏர்போர்ட் இன்றுமுதல் 24 மணி நேரமும் செயல்படும்: விமான நிலைய இயக்குநர் தகவல்

ஏகனாபுரம் கிராமத்தில் 445 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு

குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் கணவனை சம்மட்டியால் தாக்கிய மனைவி