சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சீசிங் ராஜா கூட்டாளியான சஜித்திடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். சஜித் மீது ஏற்கனவே கொலை, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த சஜித்தை பிடித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.