ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜராக சம்மன்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 22 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 200 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கொலையாளிகளின் செல்போன் அழைப்புகளை வைத்து இதுவரை 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கு தொடர்பாக்க பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. போலீசார் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து பால் கனகராஜிடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. வடசென்னை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் பால் கனகராஜ். கொலை வழக்கில் கைதான ரவுடிகள் நாகேந்திரன், சம்போ செந்தில் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞராக செயல்பட்டதால் பால் கனகராஜூக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு