ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாட்டு வெடிகுண்டுகள் சப்ளை செய்த மூவர் கைது; திடுக் தகவல்கள் அம்பலம்

பெரம்பூர்: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில் கைதான 11 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதுசம்பந்தமாக பொன்னை பாலு, ராமு, அருள் ஆகியோரை காவலில் எடுத்து விசாரித்தனர். பிரபல ரவுடி சம்பவ செந்திலின் நெருங்கி தொடர்பில் இருந்த வழக்கறிஞர் ஹரிஹரனை காவலில் எடுத்து விசாரித்தனர். நேற்று காவல் முடிந்துமீண்டும் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் கொலை தொடர்பாக அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மலர்கொடி, பாஜ பிரமுகர் அஞ்சலை, அதிமுக வார்டு கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட 18 பேரை கைது செய்துள்ளனர். சிலரை பிடித்துவிசாரணை மேற்கொண்டனர். கோடம்பாக்கத்தை சேர்ந்த விஜய் (எ) நூறு (27), முகிலன் (32), அப்பு (எ) விக்னேஷ் (21) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர். கொலை வழக்கில் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டில் வைத்திருந்தனர். இதன்பிறகு வெடிகுண்டுகளை அப்பு (எ) விக்னேஷ் எடுத்து விஜய், முகிலன்ஆகியோரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். இவர்கள் இருவரும் பைக்கில் வந்து ஓமந்தூரார் மருத்துவமனை அருகே ஹரிகரன் மற்றும் அவருடன் இருந்த மற்றொரு நபரிடம் கொடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் வழக்கறிஞர் அருளிடம் நாட்டு வெடிகுண்டுகளை கொடுத்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு நாட்டு வெடிகுண்டுகள் எடுத்துச்செல்லப்பட்டுள்ளன. வெட்டிக் ெகால்ல முடியாத பட்சத்தில் வெடிகுண்டு பயன்படுத்தலாம் என்று கொலையாளிகள் வைத்திருந்தனர். கொலை நடந்த அன்று நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டு உள்ள விஜய், முகிலன், விக்னேஷ் ஆகிய 3 பேரும் கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள்மோசஸ் என்பவரின் சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலை பார்த்துள்ளனர்.

விக்னேசுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ஒரு வழக்கறிஞருக்கும் தொடர்பு இருந்துள்ளது. அவர் மூலம் நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து வர சொன்னதும் அதனை அவர் மற்றும் ஹரிஹரன் இருவரும் சேர்ந்து பெற்றுக் கொண்டதும் தெரியவந்துள்ளது. சவுண்ட் சர்வீஸ் கடை நடத்திவந்த மோசஸ் என்பவருக்கு ஏதாவது தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடத்துகின்றனர். இவ்வழக்கில் நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து அப்புவிடம் கொடுத்த நபரையும் ஹரிஹரனுடன் சேர்ந்து நாட்டு வெடிகுண்டுகளை வாங்கிய மற்றொரு வழக்கறிஞரையும் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சம்பவ செந்திலை பிடிக்க 10 தனிப் படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது