ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமனுக்கு 4 நாள் போலீஸ் காவல்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரனின் மகனும், முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியுமான அஸ்வத்தாமனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனு செய்தனர். இந்த மனு, எழும்பூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் 5வது நீதிமன்ற நீதிபதி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அஸ்வத்தாமனை 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதுப்பேட்டையில் உள்ள ரவுடிகள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அஸ்வத்தாமன் அழைத்துச் செல்லப்பட்டார்.

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு