ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையிடம் போலீஸ் விசாரணை..!!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளுக்கு அஞ்சலை பணம் தந்தது தெரியவந்ததால் அவரது 2 வங்கி கணக்கு விவரங்களை போலீஸ் திரட்டி வருகிறது. ஆம்ஸ்ட்ராங்கை கொன்றால் வடசென்னையில் ஆதிக்கம் செலுத்தலாம் என பொன்னை பாலுவை மூளைச்சலவை செய்தது தெரியவந்துள்ளது.

அஞ்சலையிடம் 8 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை

பாஜக முன்னாள் நிர்வாகி புளியந்தோப்பு அஞ்சலையிடம் போலீசார் 8 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையாளிகளுக்கு அஞ்சலை கொடுத்த பணம் எவ்வளவு?

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு பணம் கொடுத்ததுடன் தங்குமிடமும் ஏற்பாடு செய்ததாக அஞ்சலை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை 4 இடங்களில் நடந்த சதி ஆலோசனை

ஆம்ஸ்ட்ராங்கை கொல்வது தொடர்பாக பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை 4 இடங்களில் சதி ஆலோசனை நடத்தியதாக தகவல் தெரிய வந்துள்ளது. புழல், அரக்கோணம் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூரில் பொன்னை பாலு உள்ளிட்டோருடன் அஞ்சலை சதி ஆலோசனை செய்துள்ளார்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை