போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஆற்காடு சாலையை விரிவாக்க வேண்டும்: பேரவையில் காரம்பாக்கம் க.கணபதி எம்எல்ஏ வலியுறுத்தல்


சென்னை: பேரவையில் நேற்று உயர்கல்வி மற்றும் வருவாய்த்துறை மானிய கோரிக்கையின் போது மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் க.கணபதி (திமுக) பேசியதாவது: மதுரவாயல் தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் உள்ள கிராம நத்தம் 2006-11ம் ஆண்டு காலத்தில் கலைஞரால் இலவச பட்டா வழங்கப்பட்டது. இதனை நிரந்தர பட்டாவாக பதிவு செய்து வழங்க வேண்டும். சென்னை குடிநீர் வாரியத்தில் வீட்டு இணைப்புக்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் வசூலிப்பதில் முரண்பாடு இருக்கிறது. இதனை சரி செய்ய வேண்டும்.

போரூர் டாக்டர் எம்.ஜி.ஆர். மேம்பாலத்தின் கீழ் இருபுறமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நவீன பொதுக்கழிப்பிடம் அமைக்க வேண்டும். போரூர் – வடபழனி வரை உள்ள ஆற்காடு சாலையை 6 வழிச் சாலையாக மாற்ற வேண்டும். மதுரவாயல் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வருவோம் என உறுதி கொடுத்தோம். அதை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு