அரியலூர் எஸ்.பி. அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

 

அரியலூர், நவ.9: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் நேற்று குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் அரியலூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. 10 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லாவிடம் நேரடியாக தெரிவித்து மனு அளித்தனர்.பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்