தமிழ்நாட்டின் ஒரே அரைவேக்காடு அண்ணாமலைதான் : செல்லூர் ராஜூ

குஜராத்தில் ரூ.480 போதைப்பொருள் பிடிபட்டது குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, ‘எடப்பாடி பழனிசாமி அரைவேக்காடுத்தனமாக பேசக்கூடாது’ என கூறியிருந்தார். இதற்கு அதிமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக மதுரையில் நேற்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்எல்ஏ, நிருபர்களிடம் கூறியதாவது:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியை, அண்ணாமலை குற்றம் சாட்டி பேசுகிறார். தமிழ்நாட்டில் உள்ள ஒரே அரைவேக்காடு அண்ணாமலை தான். அது எல்லோருக்கும் தெரியும். மறைந்த தலைவர்களை குறைவாக மதிப்பிடுவது, யாரையும் மதிக்காதது, இந்த நிலைப்பாடு எல்லாவற்றிலும் அரைவேக்காடு அண்ணாமலையே தான். நேற்று வரை உனக்கு என்ன தெரியும்?. ஒன்றியத்தில் ஆளும் கட்சி என்ற மமதையில் அண்ணாமலை, தலைவர்களை மதிக்காமல் அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார். அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை பெட்டியை திறந்த பிறகுதான் பாஜவிற்கு தமிழ்நாடு மக்கள் என்ன ஆப்பு வைத்துள்ளார்கள் என்று தெரியும். அதன் பிறகு அண்ணாமலை இருப்பாரா, தொடர்வாரா என்பதும் தெரியும்.

கட்சி என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால், எல்லா சமூகத்தையும், மதத்தினரையும் அரவணைத்து செல்ல வேண்டும். பாஜ கட்சி அப்படி கிடையாது. ஒரு மதத்தை முன்னிறுத்தி அரசியல் நடத்துகின்றது என்பது தான் மன வேதனை. பிரதமருக்கு கூடிய கூட்டம் என்ன கூட்டம்? அழைத்து வரப்பட்ட கூட்டம். தானாக சேர்ந்த கூட்டம் இல்லை. மோடி பேச்சைக் கேக்கலாம்னா வர்றாங்க. அண்ணாமலை இதில் ஓவராயிடுராரு. தேர்தலில் தமிழ்நாடு மக்கள் நன்றாக பதில் கொடுப்பார்கள். எந்த ஆளுங்கட்சியில் சேர்ந்தால் பசபசப்பாக இருக்கும் என போகிறார்கள். கூட்டணியில் இருப்பவர்கள் எங்களை விட்டு போனால் போகட்டும். எங்களுக்கு கவலை இல்லை.

ஆனால் அண்ணாமலை இப்படி பேசுவது சரியல்ல. வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே அண்ணாவை பற்றி பேசி, ஜெயலலிதாவை பற்றி பேசி அண்ணாமலை என்னிடம் வாங்கிக் கட்டியுள்ளார். தற்போது எடப்பாடியை பற்றி பேசுவதற்கு அவருக்கு கொஞ்சமும் தகுதி இல்லை. கடந்த முறை தேர்தலில் நாங்கள் மசூதி பக்கம் செல்லவே முடியவில்லை. பாஜவை ஆதரித்ததால் மட்டுமே தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களின் ஓட்டு எங்களுக்கு கிடைக்கவில்லை. எங்கள் தலைவரை இழிவாகப் பேசும் அண்ணாமலைக்கு எப்படி நாங்கள் துணை போவோம். நாங்கள் என்ன இழி பிறவியா?. ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடி புகழ்ந்து பேசுவது தேர்தல் ஸ்டண்ட். இது சாப்ட் கார்னர் எல்லாம் இல்லை. அவர் வேற மாதிரி செய்கிறார். இப்படியெல்லாம் பேசினால் அதிமுக ஓட்டுகள் மாறும் என நினைக்கிறார். அது தவறு. இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்