அரியானாவில் இன்று ஓட்டுப்பதிவு

சண்டிகர்: 90 தொகுதிகள் கொண்ட அரியானா சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. அங்கு தொடர்ந்து 10 ஆண்டுகளாக பா.ஜ ஆட்சி நடக்கிறது. இங்கு மூன்றாம் முறையாக ஆட்சியை கைப்பற்ற பா.ஜ முயன்று வருகிறது. ஆனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெற்றி பெறும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

பா.ஜ, காங்கிரஸ் தவிர ஆம் ஆத்மி, ஐஎன்எல்டி-பிஎஸ்பி, ஜேஜேபி-ஆசாத் சமாஜ் கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்திஉள்ளன. இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவுநடக்கிறது. 90 தொகுதிகளிலும் மொத்தம் 1031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று பதிவாகும் வாக்குகள் அக்.8ம் தேதி காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளுடன் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு