போலீசாருடன் வாக்குவாதம்; அன்புமணி மீது வழக்கு

சென்னை: மின் கட்டண உயர்வு கண்டித்து, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது இலவச தொலைக்காட்சி பெட்டியை 153வது வட்ட பாமக செயலாளர் பிரதீப் தூக்கிப் போட்டு உடைத்தார். இதனால் போலீசாருக்கும், பாமகவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி உள்பட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாமகவினர் மீது 3 பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related posts

கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் எட்டியம்மன் கோயிலில் வைக்கப்பட்ட சீல் அகற்றம்: பட்டியலின மக்கள் சாமி தரிசனம்

செப்.28-ல் பனப்பாக்கத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்!!

தவறான திசையில் அதிவேகமாக வந்த BMW கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி