அர்ஜென்டினாவின் துறைமுக நகரமான பஹியா பிளாங்காவில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த புயலால் அங்குள்ள விளையாட்டுக் கழகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஹியா பிளாங்காவைத் தாக்கிய கனமழை மற்றும் காற்று, ஸ்கேட்டிங் போட்டி நடைபெறும் மைதானத்தின் மேற்கூரையை அடித்து தள்ளியது. மேலும், இடிபாடுகளில் சிக்கிய மக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.