‘நீங்கள் நலமா’ திட்டத்தில் மாற்றுத்திறனாளியிடம் போனில் கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘‘நீங்கள் நலமா’’ திட்ட பயனாளிகளிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் கலந்துரையாடி கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களைக் கேட்டறியும் புதுமையான திட்டமான ‘‘நீங்கள் நலமா’’ என்ற திட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று‌ தலைமை செயலகத்திலிருந்து இருந்து புதிய பெருங்களத்தூர், பீர்க்கங்கரணை சதானந்தபுரம் ரோடு, கட்டபொம்மன் தெருவில் வசித்து வரும் அருள் என்ற மாற்றுத்திறனாளியிடம் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது, எனது பெயர் அருள் (42). நான் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி. என்னுடைய அக்காவின் பெயர் சுகன்யா. அவருடைய வயது 45. எனது அக்காவும் இரண்டு கால்களும் நடக்க முடியாத நிலையில் இருக்கும் மாற்றுத்திறனாளி ஆவார். என்னுடைய சகோதரிக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனும் மன வளர்ச்சி குன்றிய மாற்றத்தினாளி ஆவான். மாதந்தோறும் மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகையாக எனக்கு ரூ.1500, என்னுடைய சகோதரிக்கு ரூ.1500, என்னுடைய அக்கா மகனுக்கு ரூ.2000 உதவித்தொகை மாதம் தோறும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தனக்கு தேவையா உதவிகளை முதல்வர் செய்து தருவதாக தெரிவித்தார் என கூறினார்.

Related posts

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 3 நாளில் 130 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு: துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் பணிகள் விறுவிறுப்பு

மாநகராட்சிப் பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து

பொதுமக்கள் சிறப்பு குறைதீர் முகாம் 8 மாதங்களில் 851 மனுக்கள் மீது தீர்வு