நிலக்கடலை அவல் உப்புமா

தேவையான பொருட்கள்

400 கிராம் அவல்
150 கிராம் பெரிய வெங்காயம்
4 பச்சை மிளகாய்
2 டேபிள் ஸ்பூன் இஞ்சி
1/2 கப் நிலக்கடலை (வேக வைத்தது)
1/4 கப் தேங்காய் துருவல்
1/4 டீஸ்பூன் கடுகு
1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு,
உளுந்தம் பருப்பு
1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
தேவையானஅளவு உப்பு
4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
சிறிதளவு கறிவேப்பிலை
சிறிதளவு கொத்துமல்லித் தழை
1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு.

செய்முறை

முதலில் அவலைக் கழுவி தேவையான அளவு உப்பு சேர்த்து அவல் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 – 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். அதன்பின், வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து சிவக்க வறுத்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நிலக்கடலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் இதனுடன் ஊறிய அவலைச் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, எலுமிச்சைச் சாறு சேர்த்து கொத்துமல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையும், ஆரோக்கியமும் மிகுந்த நிலக்கடலை அவல் உப்புமா தயார்.

Related posts

தினை அரிசி வெஜிடபிள் உப்புமா

வேர்க்கடலைப்பருப்பு துவையல்

தர்பூசணி தோல் துவையல்