ஆரணியில் விசைத்தறி உரிமையாளர்களை கண்டித்து ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்கள் போராட்டம்

திருவண்ணாமலை: ஆரணியில் விசைத்தறி உரிமையாளர்களை கண்டித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் கணடன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைத்தறி தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கைத்தறி பட்டு புடவை நெசவாளர்கள் வடிவமைப்பை வைத்து விசைத்தறி உரிமையாளர்கள் நெய்து வருகின்றனர்.

இவாறு விசைத்தறி உரிமையாளர்கள் நெய்வதால் குறைந்ந்த விலைக்கு பட்டு புடவைகள் கிடைக்கின்றன. இதனால் கைத்தறி நெசவாளர்கள் மிகவும் பாதிப்பிற்குள்ளக்கியுள்ளனர். மேலும் ஆரணியில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக விசைத்தறி நெசவாளர்களுக்கு எதிராக கைத்தறி நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனொருபகுதியாக இன்று ஆரணியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் பேரணியாக கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவர் என தெரிவித்தனர்.

கைத்தறி நெசவாளர்களின் போராட்டத்தால் ஆரணி பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை மெரினா கடற்கரையில் வான்சாகசக் நிகழ்ச்சி