அருள் மழை பொழியும் அரங்கநாதப் பெருமாள்

சென்னை பட்டாபிராம், திருத்தண்டுறை என்கின்ற இடத்தில் `ஸ்ரீ அரங்கநாயகி தாயார் சமேத, ஸ்ரீ அரங்கநாதப் பெருமாள்’ எழுந்தருளி பக்தர்களுக்கு சேவைசாதித்து வருகிறார். இந்த கோயிலுக்குள் நுழைந்தாலே, ஒருவித மனதிற்குள் அமைதி பிறக்கிறது. தற்போது, இந்த கோயிலின் திருப்பணி கைங்கரியங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஆலயம் விரிவாக்கப்பட்டு, நூதன விமானம், நூதன ராஜகோபுரம், நூதன துவாரபாலகர்கள் ஆகியவை பிரதிஷ்டை செய்யப்பட்டு, நிகழும் மங்களகரமான குரோதி வருடம் வைகாசி மாதம் 27 – ஆம் தேதி (09.06.2024) ஞாயிறு அன்று, திருதியை திதி, புனர்பூசம் நட்சத்திரம், சித்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், காலை 9.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் அரங்கநாதனின் அனுக்கிரகத்தால், மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் பங்கேற்று, அரங்கனின் அருளைப் பெற வேண்டுகிறோம்.

அதே போல், 07.06.2024 முதல் 09.06.2024 வரை, காலை மாலை என இரு வேளைகளிலும் சங்கல்பம், புண்யாஹவாசனம், வாஸ்து ஹோமம், கோபூஜை, சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, மஹா அபிஷேகம், யாத்ராதானம், பூர்ணாஹுதி, வேத பிரபந்த சாற்றுமுறை, திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடைபெற உள்ளது. மேலும், 10.06.2024 திங்கள் முதல் மண்டலாபிஷேகம் ஆரம்பமாகும். தொடர்புக்கு: 9841996683.

Related posts

குறை தீர்க்கும் பெருமாள்கள்

வள்ளலார் ஆற்றிய அரும்பணிகள்

ஆத்ம தரிசனம் என்றால் என்ன?