ஆரல்வாய்மொழி – நாகர்கோவில் இடையே அமைக்கப்பட்ட இரண்டாவது அகல ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

சென்னை: ஆரல்வாய்மொழி – நாகர்கோவில் இடையே அமைக்கப்பட்ட இரண்டாவது அகல ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார். தமிழ்நாட்டின் மொத்தம் 4,02,708 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில்லே தண்டவாளங்கள் உள்ளன. இதில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் வழித்தடம் மிக முக்கியமான வரித்தடம் ஆகும்.

தென்மாவட்ட மக்கள் செல்லும் இந்த வழித்தடத்தில் சென்னை முதல் மதுரை வரை உள்ள 650 கிலோ மீட்டர் பாதை இரட்டை ரயில் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில்கள் தினசரி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் கன்னியாகுமரில் இருந்து திருநெல்வேலி வரை இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் திருநெல்வேலி ஆரல்வாய்மொழி வரையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக ஆரல்வாய்மொழி முதல் நாகர்கோவில் வரையிவான இரட்டை ரயில் பாதை பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில் ஆரல்வாய்மொழியில் இருந்து நாகர்கோவில் வரை உள்ள இரட்டை வழிப்பாதையில் ட்ராலி மூலம் ரயில்வே பாதுகாப்பு ஆனணயர் இன்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து நாளை (மார்ச் 27) அதிவேக சோதனை ரயில் இயக்கி சோதனை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த ஆய்வின் போது ரெயில்வே பணியாளர்களை தவிர பொதுமக்கள் அந்த தண்டவாளப்பகுதிகளில் அருகில் செல்ல வேண்டாம் என ரயில்வேத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றதை நொடர்ந்து சென்னை நாகர்கோவில் இடையே கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நாகர்கோவில் வழித்தடத்தில் ரயில்கள் காலதாமதம் இன்றி செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி