அரக்கோணம் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை

அரக்கோணம் : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, படித்த 119 மாணவ, மாணவிகள் பிளஸ்2 அரசு பொதுத்தேர்வு எழுதினர்.இந்நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், இப்பள்ளி மாணவ,மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். மாணவி அன்னபூரணி என்பவர் 600 மதிப்பெண்களுக்கு 592 மதிப்பெண்கள் பெற்று (உயிரியல் பிரிவு) அரக்கோணம் அளவிலும் மற்றும் பள்ளி அளவில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும், தேர்வு எழுதிய மாணவர்களில் 95 சதவீத மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்வு பெற்றுள்ளனர். கணக்கியலில் 12 பேரும், கம்ப்யூட்டர் சயின்சில் 5பேரும், வணிகவியல் 4 பேரும், உயிரியலில் ஒருவரும், கம்ப்பூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் 2 பேரும், வணிக கணிதத்தில் ஒருவரும் என மொத்தம் 25 மாணவர்கள் 100க்கு 100க்கு மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

இந்நிலையில், பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாக தேர்ச்சி பெற்ற அன்னபூரணியை பள்ளியின் தாளாளர் சுப்பிரமணியம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும், ₹.25 ஆயிரம் ரொக்க பணத்தினை பரிசு வழங்கினார்.அப்போது, பள்ளி முதல்வர் ராஜன், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் உடனிருந்தனர். சாதனை படைத்த அன்னபூரணியின் தந்தை சுப்பிரமணி என்பவர் அரக்கோணம் ஹசிங் போர்டு பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் குருக்களாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சென்னை உட்பட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

பொன்னேரியில் உள்ள எஸ்.எஸ். ஐதராபாத் பிரியாணி கடைக்கு சீல் வைப்பு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை: புதிய பணிக்காக சாலைகளை தோண்டக் கூடாது என உத்தரவு