நாளுக்கு நாள் விளைநிலங்கள் குறைந்து வருகிறது: ஐகோர்ட் மதுரைக்கிளை வேதனை

மதுரை: நாளுக்கு நாள் விளைநிலங்கள் குறைந்து வருவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கவலை தெரிவித்துள்ளது. இதே நிலை நீடித்தால் நாம் முழு உணவு பொருட்களை இறக்குமதிசெய்ய வேண்டிய நிலை அதிகரிக்கும் என புதுக்கோட்டையில் யூகலிப்டஸ் மரங்களை நடுவதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நிலத்தையும் மழையையும் மட்டுமே நம்பியிருக்கும் விவசாயிகளை தடுத்தால் எப்படி? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். புன்செய் நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டுள்ளன; எதிர்காலத்தில் உண்ணவே உணவு இருக்காது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related posts

அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்..!!

இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!