100 சதவீதம் தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழா: சென்னையில் ஆக.4ல் நடக்கிறது

சென்னை: கடந்த 2023-24ம் கல்வி ஆண்டில் நடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2199 தனியார் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளிகளும், பிளஸ் 2 தேர்வில் 1750 தனியார் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும், தனியார் பள்ளிகளில் படித்த 78 மாணவ, மாணவியர் சர்வதேச அளவிலும், 255 பேர் தேசிய அளவிலும், 1579 பேர் மாநில அளவிலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளி களை பாராட்டி ஊக்குவிக்கவும், விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு அரசு சார்பில் ஆகஸ்ட் 4ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. விழாவுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகிக்கிறார்.

Related posts

புதிய நாடாளுமன்றத்துக்குள் புகுந்த மழைநீரால் அதிர்ச்சி: பக்கெட் வைத்து பிடிக்கும் ஊழியர்கள்

தென்னிந்தியாவில் கொட்டிய மழை வடமேற்கு, கிழக்கில் இல்லை; 230 மாவட்டத்தில் கன மழை 232ல் சராசரிக்கும் குறைவு: இந்திய வானிலை மையம் தகவல்

ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டனில் இந்தியாவின் லக்சயா சென் காலிறுதிக்கு தகுதி!