காஞ்சிபுரம்: திமுக சுற்றுச்சூழல் அணி சார்பாக மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்களின் 2வது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தின் தலைவராக முருகன், துணை தலைவராக பிரசாத், அமைப்பாளராக கே.ஆர்.ஆனந்தன், துணை அமைப்பாளர்களாக முனிரத்தினம், சந்தோஷ்கண்ணன், உமாசங்கர், டேனியல் சந்துரு, ராஜன், பெருமாள், வாசிம்ராஜா ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.