நாடாளுமன்ற தேர்தலுக்கு 35 பேர் குழு நியமனம் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மேலிட பொறுப்பாளர் ஆலோசனை: சத்தியமூர்த்திபவனில் 2 நாள் நடக்கிறது

சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அஜோய் குமார் நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் கட்சியினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து அஜோய் குமார் புதுச்சேரி புறப்பட்டு சென்றார். நேற்று மாலை புதுச்சேரியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று காலை சென்னை சத்தியமூர்த்தி பவன் வருகிறார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நிர்வாகிகள், வார் ரூம் பொறுப்பாளர்கள், கட்டுப்பாட்டு அறை உறுப்பினர்கள் ஆகியோருடன் இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகிறார். இந்த சூழலில், தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழுவை அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார். இந்த குழுவில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் 35 பேர் உள்ளனர்.

அதன்படி, ப.சிதம்பரம், குமரி அனந்தன், செல்வப்பெருந்தகை, மணிசங்கர் அய்யர், தனுஷ்கோடி ஆதித்தன், சுதர்சன நாச்சியப்பன், செல்லக்குமார், மாணிக்கம் தாகூர், தங்கபாலு, கிருஷ்ணசாமி, ஈவிகேஎஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், கே.ஆர்.ராமசாமி, கோபிநாத், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், ஜெ.எம்.ஆரூண், பீட்டர் அல்போன்ஸ்,

நாசே ராமச்சந்திரன், ராஜேஷ் குமார், சி.டி.மெய்யப்பன், விஸ்வநாதன், கிறிஸ்டோபர் திலக், மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம், பிரவீன் சக்கரவர்த்தி, ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ ஆகிய 31 பேர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர், மாணவர் காங்கிரஸ் தலைவர், மகிளா காங்கிரஸ் தலைவர், சேவாதள தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆகிய 4 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

Related posts

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தலைவராக ககன் நரங் அறிவிப்பு

கேரளாவில் வெளுத்து கட்டும் பருவமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் சுருளி அருவி: சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரே குஷி

தீவிரவாத ஊடுருவலை தடுக்க வங்கதேச எல்லையை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்: எல்லை பாதுகாப்பு படை நடவடிக்கை