சென்னையில் உள்ள குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகாரி நியமனம்

சென்னை: சென்னையில் உள்ள குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் குடிபெயர்வோர் பாதுகாப்பு அதிகாரியாக எம் ராஜ்குமார் பொறுப்பேற்றுள்ளார். மத்திய வனம், சுற்றுச்சூழல், பருவ நிலைமாற்ற அமைச்சகத்தில் இருந்து அயல் பணியாக இந்தப் பதவிக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். இந்திய வனப்பணியில் 2014-ம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த இவர், இதற்கு முன் நாகாலாந்தில் உள்ள கோஹிமாவில் கோட்ட வன அதிகாரியாகப் பணியாற்றினார். இவரது சிறப்புமிக்க பணிக்காக 2022-ம் ஆண்டில் ஆளுநர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

சென்னை அலுவலகத்தில் குடிபெயர்வோர் பாதுகாப்பு அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள ராஜ்குமார், குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்வதற்குத் திட்டமிட்டுள்ளார். தமிழ்நாட்டிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் வெளிநாட்டுக்கு பணியாளர்களை வேலைக்கு அனுப்பும் போலியான முகமைகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாநில முகமைகள் மற்றும் காவல் துறையுடன் இணைந்து பாதுகாப்பான குடிபெயர்வு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: முதல் சுற்றில் ஜோகோவிச், இகா ஸ்வியாடெக் வெற்றி

டி.20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? டேவிட் மில்லர் விளக்கம்

மணிப்பூரில் தொடரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது: பிரதமர் மோடி உரை