சென்னை: பள்ளிக்கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசாணைப்படி, 2 % ஒதுக்கீடு தரவில்லை என, பரணி என்பவர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு தராமல், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் கூடாது என ஐகோர்ட் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.