இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் உதவி ஆராய்ச்சி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள அறிவிப்பு: இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் காலியாக உள்ள உதவி ஆராய்ச்சி அலுவலர் (வேதியியல், உயிர்வேதியியல், நுண்ணுயிரியல்) பணியிடங்களில் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பணியமர்த்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள், இதர நெறிமுறைகள், கல்வித்தகுதி, வயது மற்றும் கூடுதல் தகவலுக்கு http://www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறையின் வலைதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்யப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ‘சென்னை, அரும்பாக்கம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை இணைப்பு வளாகத்திலுள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு இயக்குநருக்கு, மே மாதம் 2ம் தேதி, மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

உரிய நேரத்தில் தரமான உரம் கிடைக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்பாசனம்

ஆந்திராவில் இருந்து புதுக்கோட்டைக்கு 1500 டன் பச்சரிசி மூட்டைகள் வந்தது

இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்