அக்னிவீர் வாயு தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

 

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர்கள் அக்னிவீர் வாயு தேர்வுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய விமானப்படையின் அக்னிவீர் வாயு விமானப் படை திட்டத்தின் கீழ், ஆட்சேர்ப்பு தேர்விற்கான பதிவு இணையதளம் வழியில் நடந்து வருகிறது. இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க வரும் 17ம் தேதி கடைசி நாளாகும். இதற்கு 27.6.2003 முதல் 27.12.2006 வரை பிறந்த, திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். இந்த தேர்வுக்கு 12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல்(மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி) மூன்றாண்டு டிப்ளமோ படிப்புகளில் மொத்தம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆர்வமுள்ள இளைஞர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், தகவல்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், அலுவலக வேலைநாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த, தகுதிவாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த தேர்வில் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’