பயன்பாட்டில் இல்லாத தொழிற்பேட்டையில் அரசு கலைக்கல்லூரி: காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட் வலியுறுத்தல்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று காலை நீர்வளம், இயற்கை வளம் மற்றும் தொழில் நலன், திறன் மேம்பாடு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் விளவங்கோடு தொகுதி உறுப்பினர் தாரகை கத்பட் (காங்கிரஸ்) பேசியதாவது: விளாத்துறை ஊராட்சி, தாளவிளை பகுதியில் பயன்பாட்டில் இல்லாத தொழிற்பேட்டையில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும்.

களியக்காவிளை பழைய பேருந்து நிலைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு 5 ஆண்டுகள் கடந்தும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிக்கு நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. உடனடியாக நிதி ஒதுக்க கேட்டுக் கொள்கிறேன். போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கி வந்த அகவிலைப்படி 2015 நவம்பர் மாதத்திலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக வழங்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அறிவிப்பு

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு