கூட்டுறவு செயலி!

தமிழக அரசு இந்த ஆண்டு கூட்டுறவு துறைகளுக்காக பல அதிரடி திட்டங்களை அறிவித்திருந்த நிலையில், அத்துறையை டிஜிட்டல் மயமாக்க முதல்வர் உத்தரவிட்டதை தொடர்ந்து ‘கூட்டுறவு ஆப் ’ (Kooturavu App) எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளனர். கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வகையில், கூட்டுறவு சங்கங்களால் வழங்கப்படும் சேவைகள் தொகுக்கப்பட்டு, கூட்டுறவு என்ற பெயரில் புதிய செயலி உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பல்வேறு தகவல்களை பெற முடிவதுடன், கடன்கள் குறித்ததகவல்கள், பெறும் வழிகள் என அனைத்தும் இந்தச் செயலியில் பெறலாம். மேலும் கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தையும் இணைய வழியே செயலியில் சமர்ப்பித்திடும் வகையில், இந்த செயலியில் விண்ணப்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Related posts

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும்: முதல்வர் அறிவிப்பு

உளுந்தூர்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு