அறியலாம் ஆப்ஸ்

உமாங் செயலி மூலம் நாம் எளிதாக பிஎஃப் கணக்கையும் அதில் உள்ள பேலன்ஸையும் கண்காணிக்க முடியும். இதற்கு முதலில் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களின் UAN எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணை இணைத் திருக்க வேண்டும். மேலும் பி.எஃப் பாஸ்புக் சோதனை, முன்பணம் பெறுதல் என பல வசதிகள் இந்தச் செயலி மூலம் பெறலாம். பிளே ஸ்டோர் வாயிலாக Umang செயலியை பதிவிறக்கம் செய்து மொபைல் எண் மூலம் பதிவு செய்யவும். இதனை அடுத்து “All Services” என்பதை தேர்வு செய்து பின்னர் அதில் காட்டும் பட்டியலில் “EPFO” என்பதை தேர்ந்தெடுக்கவும். உங்களது பிஎஃப் பேலன்ஸ் குறித்த தகவலுக்கு “View Passbook” என்பதை தேர்வு செய்யவும். இதனை அடுத்து உங்களின் UAN எண்ணை உள்ளிடவும், பின்னர் Get OTP என்பதை கிளிக் செய்யவும்.

 

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு