மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் சசிகலா, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் ஆகியோருக்குகட்சியில் இடமில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: சசிகலா, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் ஆகிய 3 பேருக்கும் மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திர்ந்தார்.

முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருந்த அறிக்கையில்;
பல்வேறு நிலைகளில் பணியாற்றி வந்த நிர்வாகிகள், கழகத்தின் கொள்கை, குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான செயல்களில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள். தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால், அத்தகையவர்கள் கழகப் பொதுச் செயலாளருக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்து, மீண்டும் கழகத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்படுபவர்களும், கழகப் பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்கி மீண்டும் கழகத்தில் சேருபவர்களும் மட்டுமே, கழக உறுப்பினர்களாகக் கருதப்படுவர்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் காலந்தொட்டு இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது.ஆகவே, கழகத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர்கள் மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால், மேற்கண்ட நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், சசிகலா, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் ஆகிய 3 பேருக்கும் மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்ள முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் மற்றவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து இபிஎஸ் முடிவு செய்வார் என ஜெயகுமார் தெரிவித்தார்.

Related posts

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்க தடை

24 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

ஆம்பூர் அருகே இன்று அதிகாலை பள்ளத்தில் கார் கவிழ்ந்து தீப்பிடித்தது பெண் உள்ளிட்ட 4 பேர் தப்பினர்