மீண்டும் ஒரு பேரழிவை சந்திக்க உள்ளதா உலகம்?.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மும்பை: 4000 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து சமவெளி நாகரிகம் வறட்சியால் அழிய தொடங்கிய போது இருந்த வானிலை மாற்றங்கள் தற்போது உள்ள பருவநிலையுடன் ஒத்துப்போவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்திய துணை கண்டத்தின் மிகவும் பழமையான நாகரிகமாக கருதப்படும் சிந்து சமவெளி நாகரிகம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னாள் அழித்துள்ளது. இதற்கான காரணம் குறித்து புனேவில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. Quaternary என்ற சர்வதேச இதழில் வெளியாகி உள்ள ஆய்வு முடிவுகள் தற்போது சர்வதேச அளவில் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் மீதான அச்சத்தை அதிகரித்துள்ளது.

ஒடிசா மாநிலம் குப்தீஸ்வர் மற்றும் ஆந்திராவின் கடப்பாவில் பழங்கால குகைகளில் இருக்கும் 7000 ஆண்டுகள் பழமையான செங்குத்து படிமங்களின் மூலம் சிந்து சமவெளி காலத்தில் இருந்த காலநிலை குறித்த தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் திரட்டியுள்ளனர். அதன்படி சூரிய ஒளி குறைவு, மழை மேகங்கள் குவித்தலுக்கு சாதகமான வானிலை, தெற்கு திசையை நோக்கி நகருதல், எல் நினோ உள்ளிட்டவற்றால் சிந்து சமவெளி நாகரிகள் செழித்திருந்து ஹரப்பா, மொகஞ்சதாரோ உள்ளிட்ட பகுதிகளில் பருவமழை பொய்த்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக நீடித்த வறட்சியால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டதுடன் இந்து வெளி நாகரிகம் வீழ்ச்சியை சந்தித்ததாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

குறிப்பாக 4,200 ஆண்டுகளுக்கு முன் மழைமேக குவியல் தெற்கு திசையில் நகர்ந்த அதே நேரத்தில் இந்தியாவின் கிழக்கு கடற்பகுதியில் வெப்ப குறைவு ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பருவநிலையும் மனித செயல்பாடுகளும் ஒன்றை ஒன்று சார்ந்து சுழற்சி முறையில் இருந்ததாகவும், ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 4000 ஆண்டுகளுக்கு முன் பருவமழையை பாதித்த வானிலையும் தற்போது பருவமழையை பாதிக்கும் வானிலையும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே புவி வெப்பமடைதலை தடுத்தல் உள்ளிட்ட பருவநிலை பாதுகாப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் துரிதப்படுத்த வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

ஏரியில் குளிக்கும் போது சுழலில் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த பரிதாப சம்பவம்!

லெபனான் நாட்டில் பேஜர்கள் மூலம் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் பலி; 2,700-க்கும் மேற்பட்டோர் காயம்!

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி இந்தியா கூட்டணி கட்சிகள் புதுவையில் நாளை பந்த்