தேர்தல் கூட்டணி அமைப்பதில் கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம்: ஜெயக்குமார் திடீர் பல்டி

சென்னை: தேர்தல் கூட்டணி அமைப்பதில் கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்று ஜெயக்குமார் கூறினார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறது என்பதை வெளிப்படையாக கூற முடியாது. அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார். தேர்தல் கூட்டணி அமைப்பதில் கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம்.

அதிமுக தொகுதி பங்கீடு குழு அமைத்து பல நாட்கள் ஆகியும் இதுவரை எந்த கட்சிகளுடனும் அந்த குழு பேச்சு நடத்தவில்லை. அண்மையில் அதிமுக அலுவலகத்தில் தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை நடந்தபோதும் வேறு எந்த கட்சியை சேர்ந்தவர்களும் வரவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஜி.கே.வாசன் சந்தித்தபோதும் கூட்டணி குறித்து பேசவில்லை. இதற்கு முன் தோழமையாக இருந்தாலும் இப்போது பாஜ எங்களுக்கு எதிரி. பாஜ எங்களுக்கு எதிரி என்ற கண்ணோட்டத்துடன்தான் அணுகுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Related posts

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் 27 பேர் கொண்ட பட்டியல் அறிவிப்பு

மேட்டுப்பாளையம் – கோவை இடையே இரட்டை இருப்புப் பாதை: ரயில்வே அமைச்சரிடம் ஒன்றிய இணையமைச்சர் எல் முருகன் கோரிக்கை

சிவகங்கை அருகே சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்