லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் அதிகாரிகள் ‘ஜூட்’ ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் ‘சரக்கு பார்ட்டி’ : விடியவிடிய நடந்த ரெய்டில் கணக்கில் வராத பணம், ஆவணங்கள் சிக்கியது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் ரெய்டுக்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும், அங்கு மதுஅருந்தி கொண்டிருந்த அதிகாரிகள், மீனவர்கள் தலைதெறிக்க ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வந்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் அங்கு மது அருந்தி கொண்டிருந்த அதிகாரிகள், மீனவர்கள் மதுபாட்டில்களை போட்டுவிட்டு அவசரமாக தலைதெறிக்க ஓடினர்.

இந்த பரபரப்பை பார்த்து அங்கிருந்த மீனவர் சங்க கணக்கர் ஒருவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் கதவுகள் அடைக்கப்பட்டு லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினர். இரவு 7 மணிக்கு துவங்கிய சோதனை நேற்று அதிகாலை 4 மணி வரை நடந்தது.விடிய விடிய நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ₹55 ஆயிரம், நூற்றுக்கணக்கான படகுகள் மற்றும் டீசல் டோக்கன் குறித்த போலி ஆவணங்கள், ஆர்சி புக் உட்பட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

ராமேஸ்வரம் மீன்வளத் துறை அலுவலகத்தில் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் நடந்து வருவதாக புகார்கள் வந்ததால் சோதனையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

மக்களவை சபாநாயகரின் உரிமைகள் பறிக்கப்படுகிறது: அகிலேஷ் பேச்சால் அமித் ஷா கோபம்

போகத் தகுதி நீக்கத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளியால் வெளியேறினார் ஜெகதீப் தன்கர்: மாநிலங்களவையில் பரபரப்பு

தமிழ்நாட்டில் 2030க்குள் 30% பேருந்துகள் மின்சாரமயம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்