கோடை சீசனை முன்னிட்டு பூங்கா நுழைவு வாயில் பகுதியில் வர்ணம் பூசும் பணிகள் துவக்கம்

ஊட்டி : கோடை சீசனை முன்னிட்டு அனைத்து சுற்றுலா தலங்களும் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பூங்காவில் உள்ள நுழைவு வாயில் பகுதியில் வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடைகாலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசன் அனுசரிக்கப்படும் நிலையில், இங்கு மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி ரோஜா கண்காட்சி மற்றும் பழ கண்காட்சியாகவே நடத்தப்படுகின்றன. இதனை காண்பதற்காக பல லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக இங்கு உள்ள பூங்காக்கள் தயார் செய்யப்படுவது வழக்கம். குறிப்பாக தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்வது வழக்கம். கோடை சீசனுக்காக தற்போது பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது மட்டும் இன்றி பூங்காவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பூங்காவின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள மலர் மாதங்களில் வர்ணம் பூசும் பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது மேலும் நுழைவாயில் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடத்திலும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்