திண்டுக்கல் உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு

திண்டுக்கல்: உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு பெற்றது. சோதனையில் கணக்கில் வராத ரூ.1.57 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த 14 ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் 306 கிராம ஊராட்சிகள் உள்ளன. அதே சமயம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி தணிக்கைத்துறையின் உதவி இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக அப்பணி நடந்தது.

இதையடுத்து ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகளின் வரவு செலவு கணக்கு தணிக்கை செய்வதற்கு உள்ளாட்சி நிதி தணிக்கை பிரிவு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இரவு 7:00 மணிக்கு உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். 4 மணி நேரத்திற்கு மேலாக அங்கு பணிபுரியும் அதிகாரிகள் அலுவலர்கள் உட்பட 20க்கு மேற்பட்டோரிடம் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத ரூ. 1.57 லட்சம் சிக்கியது.

Related posts

உ.பி. 121 பேர் பலி சம்பவம்.. ஹத்ராசில் நெரிசல் ஏற்பட, நச்சு திரவம் தெளிக்கப்பட்டதா?: போலே பாபா தரப்பு வழக்கறிஞர் திடுக்கிடும் தகவல்!!

திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் நாளை முதல் உள்ளூர் வாகனத்துக்கு முழு கட்டண விலக்கு கிடையாது

பிணையில் வருபவர்களிடம் கூகுள் லோகேஷன் கோரி நிபந்தனை விதிக்க கூடாது: காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் ஆணை