சமூக விரோத செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு ஆட்சி அதிகாரத்தை, திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற சமூக விரோத செயல்களை தடுத்து நிறுத்துவதில் பயன்படுத்த வேண்டும். குற்றச்செயல்கள் நடைபெறுவதற்கு முன்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சென்னை முதல், பல்வேறு மாவட்டத் தலைநகரம், நகரப் பகுதி, ஊரகப் பகுதி, கிராமப்புறம் என அனைத்து இடங்களிலும் நடைபெறும் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சமூக விரோதச் செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.எனவே, சமூக விரோத செயல்களை தடுக்க காவல் துறை மூலம் முறையான நடவடிக்கைகளை 24 மணி நேரமும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்