ஆண்டிபட்டி அருகே குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்யாமல் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டதாக பொதுமக்கள் வேதனை..!!

மதுரை: ஆண்டிபட்டி அருகே குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்யாமல் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தெப்பம்பட்டியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

உரிய பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்த தொட்டியை இடித்து விட்டு புதிதாக கட்ட தெண்டர் விடப்பட்டது. முன்னறிவிப்பின்றி அதனை ஒப்பந்ததாரர்கள் இடித்ததால் கடந்த சில வாரங்களாக தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். தங்களுக்கு குடிநீர் வழங்க உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இல்லை என்றால் ஆண்டிபட்டி நகருக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

Related posts

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!