காஞ்சிபுரத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இதில், மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பி சுரேஷ்குமார் கலந்துகொண்டு, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு அனைவரையும் வரவேற்றார். மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள், போதை பொருட்களை தவறான பயன்பாட்டிற்கு பயன்படுத்துதலுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, சுமார் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ – மாணவிகள் பேரணியாக சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இந்த பேரணி, காவலான் கேட், மேட்டு தெரு வழியாக பச்சையப்பன் பள்ளியில் முடிவடைந்தது. நிகழ்வின்போது, சவிதா மருந்தியல் கல்லூரி பேராசிரியர்கள் திருமலை குமரன், புண்ணியகோட்டி, சரண்யா, போலீசார் சங்கர், பாஸ்கர், சவிதா மருந்தியல் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை

ஜெயா கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் கோலப் போட்டிகள்

குடியிருப்புக்கு நடுவில் உள்ள மதுபானக் கடையால் மக்கள் அவதி: வேறு இடத்தில் மாற்ற கலெக்டரிடம் மனு