லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலை ஒட்டி கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சரவணன், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் நேற்று மாலை 5 மணி அளவில் கூடுவாஞ்சேரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீரென நுழைந்து அலுவலக கதவுகளை பூட்டினர்.

பின்னர், அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் பத்திர பதிவு செய்ய வந்த 50 பேரின் செல்போனை பறிமுதல் செய்து சிறை வைத்தனர். பின்னர், ஒவ்வொரிடமும் தனித்தனியாக விசாரணை செய்த பின்னரே பத்திர பதிவு செய்ய வந்தவர்களை வெளியே அனுப்பினர். இதில் 4 லட்சத்து 24 ஆயிரம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. இதனால், கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது