மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது

பீகாரின் சாரன் மாவட்டத்தில் கந்தாகி ஆற்றின் மீது கட்டப்பட்டு இருந்த பாலம் நேற்று இடிந்து விழுந்தது. இந்த பாலம் 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பாலம் உடைந்ததற்கான காரணம் தெரியவில்லை. நேற்று முன்தினம் இங்குள்ள ஜன்தா பசார் மற்றும் லாலட்பூரில் உள்ள இரண்டு சிறிய பாலங்கள் இடிந்தது. உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு பாலங்கள் இடிந்து விழுவது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சிவான், சாரன், மதுபானி, அராரிய, கிழக்கு சம்பரான் மற்றும் கிஷான்கஞ்ச் மாவட்டங்களில் கடந்த 15 நாட்களில் மொத்தம் 10 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்