கும்பகோணத்தில் வார இறுதியில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு!

சென்னை: கும்பகோணத்தில் வார இறுதி நாட்களான ஜூலை 8 மற்றும் ஜூலை 9ம் தேதிகளில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் மேலாண் இயக்குநர் மோகன் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 9-ம் தேதி அதிக அளவில் திருமணங்கள் நடைபெற உள்ளதாலும், வார இறுதி நாட்களாக உள்ளதாலும், வார இறுதி நாட்களான 8 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் பொதுமக்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம் வேதாரண்யம். திருத்துறைப்பூண்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும், திருச்சியிலிருந்து கோயமுத்தூர், திருப்பூர், சேலம், தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் மேலாண் இயக்குனர் மோகன் அறிவித்துள்ளார்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு