அண்ணா பல்கலை. தேர்வுக்கட்டண உயர்வு எதிர்வரும் செமஸ்டர் தேர்வுக்கு பொருந்தாது: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி

விழுப்புரம்: அண்ணா பல்கலை.யில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள 50 சதவீத கட்டண உயர்வு இந்த செமஸ்டரில் உயர்த்தப்பட மாட்டாது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணமாக தாள் ஒன்றுக்கு 150 ரூபாய் கட்டணமாக பெறப்பட்டு வந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி 225 ரூபாயாகவும் பட்டயப் படிப்புக்கான சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்படுவதாக செய்தி வெளியானது.

செமஸ்டர் ஒன்றுக்கு 9 தாள்கள் எழுத வேண்டியிருக்கும் நிலையில் ஏற்கனவே கட்டி வந்த தேர்வுக் கட்டணத்தை விட தற்போது கூடுதலாக 2,000 ரூபாய் கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் தேர்வுக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலை.யில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள 50 சதவீத கட்டண உயர்வு இந்த செமஸ்டரில் உயர்த்தப்பட மாட்டாது என விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்,

அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த செமஸ்டர் தேர்வு கட்டணம் உயர்த்தப்படாது:

அண்ணா பல்கலை. தேர்வுக்கட்டண உயர்வு எதிர்வரும் செமஸ்டர் தேர்வுக்கு பொருந்தாது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அனைத்து துணைவேந்தர்களிடம் கலந்தாலோசித்து அடுத்தாண்டு முதல் அனைத்து கல்லூரிகளிலும் ஒரே கட்டண முறையை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார். அண்ணா பல்கலை.யில் தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டதாக அறிவிப்பு வெளியான நிலையில் அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார்.

அண்ணாமலை பல்கலை.யில் 56 பேர் பணிநீக்கம்-விளக்கம்:

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உரிய கல்வித்தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்த பேராசிரியர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட உதவி பேராசிரியர்கள், விதிமுறைகளை மீறி 10 ஆண்டுகளுக்கு முன்பு பணியமர்த்தப்பட்டவர்கள். அண்ணாமலை பல்கலை.யில் எந்த தகுதியும் இல்லாதவர்களை நியமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தகுதியில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியதன் அடிப்படையில் அண்ணாமலை பல்கலை.யில் 50 பேர் நீக்கம் செய்யப்பட்டனர். 56 பேரும் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்து பேராசிரியர் பணிக்கு சேர்ந்துள்ளதே தவறு. தகுதிக்கேற்ப பணி வழங்க அரசு முடிவு செய்யும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு