அண்ணனூர் ரயில்நிலையம் அருகே தண்டவாளத்தை ஒட்டி ராட்சத பள்ளம்: மின்சார ரயில்கள் தாமதம்

ஆவடி: அண்ணனூர் ரயில்நிலையம் அருகே இன்று காலை தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் திடீரென ராட்சத பள்ளம் உருவானது. இதனால் அப்பகுதியில் மின்சார ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக கடந்து சென்றது. ஆவடி அருகே அண்ணனூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் கடந்த சில நாட்களாக மின்கம்பிகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், இன்று காலை தண்டவாளத்தை ஒட்டிய தரைப்பகுதியில் திடீரென ராட்சத பள்ளம் உருவானது. இதனால் அப்பகுதியில் சென்னை மற்றும் ஆவடி மார்க்கத்தில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்தனர். அங்கு தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் ஏற்பட்ட ராட்சத பள்ளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, அனைத்து மின்சார ரயில்களும் விரைவு பாதையில் இயக்கப்பட்டன. இதனால் அந்த ரயில்கள், நடைமேடை இல்லாத பட்டாபிராம், இந்து கல்லூரி, அண்ணனூர் ரயில்நிலையங்களில் நிற்காமல் சென்றது. இதனால் அங்கு மின்சார ரயிலில் பயணம் செய்ய காத்திருந்த ஏராளமான பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதைத் தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரத்துக்குள் அந்த ராட்சத பள்ளம் சீரமைக்கப்பட்டு, மின்பாதையில் அனைத்து மின்சார ரயில்களின் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related posts

மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்ள 6 பத்திரிகையாளர்களுக்கு ரூ.10,01,206 நிதியுதவி வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!!

வளர்ப்பு நாயை கவ்விச் செல்ல முயன்ற சிறுத்தை தப்பி ஓட்டம்

இஸ்லாமியர்கள் பற்றி சர்ச்சை கருத்து: பகிரங்க மன்னிப்பு கோரினார் கர்நாடக ஐகோர்ட் நீதிபதி