அண்ணாநகர் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ மோகன் ஏற்பாட்டில் 80,000 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு: வீடுவீடாக சென்று நிர்வாகிகள் வழங்கினர்

சென்னை: அண்ணாநகர் தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மோகன் ஏற்பாட்டில் 80,000 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை திமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்களுக்கு வழங்கினர். மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அண்ணாநகர் தொகுதியில் 60,000 மக்களுக்கு உடனடி நிவாரணமாக உணவு, பால் மற்றும் 2000 லிட்டர் தண்ணீர் ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் மோகன் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து சென்னை மேற்கு மாவட்டம், அண்ணா நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14 வட்டங்களில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80,000 குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் ஆணைப்படி, மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80,000 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு கடந்த 14ம் தேதி துவக்கி வைத்தார். இதையடுத்து அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14 வட்டங்களில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மோகன் ஏற்பாட்டில் 80,000 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

மருத்துவ முகாம்கள் தொகுதி முழுவதும் நடத்தப்பட்டது. மேலும் திமுக தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் கார்த்திக் மோகன் தலைமையில் அண்ணாநகர் பகுதி கழகச் செயலாளர்கள் ராமலிங்கம், பரமசிவம், மாமன்ற உறுப்பினர்கள், வட்ட செயலாளர்கள், பாக முகவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் வீடுவீடாக சென்று நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கினர்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை