ஆருத்ரா ஊழல் வழக்கில் அண்ணாமலையும் சிக்குவார்: பாலகிருஷ்ணன் பேட்டி

நெல்லை: நெல்லையில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டி; பாஜ தலைவர் அண்ணாமலை நடைபயணத்தின் போது ஊழல் குறித்து பேசிவருகிறார். ஒன்றிய அரசின் ஊழல் குறித்து மத்திய தணிக்கை குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆகவே அண்ணாமலைக்கு ஊழல் குறித்து பேச எவ்வித தகுதியும் இல்லை. மத்திய தணிக்கை குழு அறிக்கை குறித்து ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி அதிகாரிகளை பலிகடா ஆக்குகிறார்.

மத்திய தணிக்கை துறை ஊழல் அறிக்கையை திசை திருப்ப அவர் முயற்சிக்கிறார். ஆகையால் அவர் பதவி விலக வேண்டும். ஆருத்ரா நிறுவன ஊழல் வழக்கில் பாஜகவினருக்கு தொடர்பு உள்ளது. இவ்வழக்கில் அண்ணாமலை கூட வரலாம். இதனை மறைக்க அண்ணாமலை நடைபயணத்தின் போது தமிழகத்தில் ஊழல் பற்றி பேசிவருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

தஞ்சையில் எண்ணெய் பனை சேவை மையம் திறப்பு

மணிப்பூரில் முகாம்களில் உள்ள மக்களை சந்தித்தார் ராகுல்

விவசாய பயன்பாடு, மண்பாண்டம் செய்வதற்கு கட்டணமின்றி மண் அள்ள அனுமதி: ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்